இந்தியாவில் தற்போது வரை 37 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று உள்ளே நுழைந்தது. இன்று ஆந்திராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதியான நிலையில் தற்போது கர்நாடகாவில் ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடகா வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் கொரோனா தொற்றால் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் 18 பேர், ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேர், டெல்லியில் 2 பேர், குஜராத்தில் 3 பேர், ஆந்திராவில் ஒருவர், சண்டிகரில் ஒருவர், கர்நாடகாவில் மூன்று பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.