இந்தியாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 108 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . டெல்லியில் 79 பேருக்கும், குஜராத் மாநிலத்தில் 43 பேருக்கும் , தெலுங்கானாவில் 38 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.