சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 170 பேர் பலியாகியிருப்பதாகவும், வூகான் மாகாணத்தில் மட்டும் 7,700 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் வுஹான் பல்கலைக்கழகத்திலிருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 800க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.