நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய தடை விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்த மருந்தின் ஊசியின் மூலப் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.