இந்தியாவில் ரூ.200க்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தடுப்பூசியின் விலை தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பு ஊசி ஒரு டோ ஷின் விலை 200 ரூபாயாக நிர்ணயம் செய்யப் பட்டிருப்பதாக சிரம் இன்ஸ்டியூட் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிட்ஷில்ட் என்ற தடுப்பூசியை சீரம்நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தியாவில்கோவில்சில்டு – கோவாக்ஸ் இன் என்று இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. முதலாவதாக முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கக் கூடிய நிலையில் இந்தியாவில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று சீரம் இன்ஸ்டியூட் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது