டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வினோத்குமார் வட்டு எறிதல் F 52வில் பங்கேற்க தகுதியற்றவர் என தொழில்நுட்ப குழு அறிவித்திருக்கிறது. அதனால் வெண்கலப்பதக்கம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப குழுவின் மறுபரிசீலனையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் துரதிஷ்டவசமானதாக பார்க்கப்படுகின்றது. இதனால் இந்தியாவுக்கு கிடைத்த ஒரு பதக்கம் திரும்ப பெறப்பட்டு இருக்கின்றது.
பரிசீலனை முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது? பரிசீலனை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன ? என்பதையெல்லாம் அறிந்து கொள்ளும் முயற்சியில் தற்போது இந்திய குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆகவே இப்போது ஆரம்ப கட்டமாக வந்திருக்கும் தகவலின்படி இந்த பதக்கம் திரும்ப பெறப்படுவதால் இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைகிறது.
சிறப்பான முறையிலே இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று கொண்டிருந்தார்கள் என்று எல்லோரும் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அந்த மகிழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தற்போது தகவல் தொழில்நுட்ப குழுவின் முடிவு அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப குழுவின் முடிவுதான் இறுதியானதா அல்லது இதற்கு மேல் முறையீடு செய்ய முடியுமா ? அதற்கான காரணங்கள் என்ன என்ற விவரங்களை எல்லாம் இந்திய குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகிறார்கள்.