Categories
தேசிய செய்திகள் மற்றவை விளையாட்டு

BREAKING : “ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம்”… வட்டு எறிதலில் வினோத்குமார் சாதனை.!!  

வட்டு எறிதல் போட்டியில் வினோத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதால் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்துள்ளது.. 

16-வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 54 இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.. இந்நிலையில் தற்போது வட்டு எறிதல் எஃப்52 பிரிவில் இந்திய வீரர் வினோத்குமார்  வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.. முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில் பவினாபென் படேல்,  வெள்ளிப் பதக்கமும், டி47 உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கமும் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்..

இந்தநிலையில், தற்போது வினோத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.. இதனால் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3  பதக்கம் கிடைத்துள்ளது. இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது..

 

 

Categories

Tech |