Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அமைக்கப்படும் – பிரதமர் மோடி.!!

டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்தியா கேட்டில் இருந்து அமர்ஜவான் ஜோதி இடமாற்றம் செய்யப்படும் நிலையில், 125-வது பிறந்தநாளையொட்டி கிரானைட்டால் செய்யப்பட்ட சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி  அறிவித்துள்ளார்..

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும் இவ்வேளையில், கிரானைட் கற்களால் ஆன அவரது பிரமாண்ட சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேதாஜிக்கு நாடு நன்றிக்கடன் செலுத்தும் அடையாளமாக சிலை திகழும் என்று கூறியுள்ளார்..

மேலும் நேதாஜி போஸின் பிரமாண்ட சிலை கட்டி முடிக்கப்படும் வரை, அவரது ஹாலோகிராம் சிலை அதே இடத்தில் இருக்கும். நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி ஹாலோகிராம் சிலையை திறந்து வைப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்..

Categories

Tech |