உலகம் முழுவதும் கொரோனா தொற்று அடுத்தடுத்து உருமாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலை பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இரண்டாவது அலை அதற்கு நேர்மாறாக மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இரண்டாம் அலையில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று உருமாற்றம் கண்டு மூன்றாவது மற்றும் நான்காவது அலைகள் என்று பரவி வருகின்றது.
இதனால் திரைப்பிரபலங்கள் மற்றும் விளையாட்டு துறைகளைச் சார்ந்த பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான தவான், ஸ்ரேயாஸ், ருதுராஜ், நவதீப் சைனி ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்திய அணி வீரர்கள் 4 பேர், நிர்வாகிகள் 3 பேர் என 7 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவிலிருந்து குணமடையும் வரை வீரர்கள், அணி நிர்வாகிகள் தனிமையில் இருப்பார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்திய அணியில் 4 வீரர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் இந்திய ஒருநாள் அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.