Categories
உலக செய்திகள்

#BREAKING: இந்திய மாணவர்கள் வெளியே செல்ல வேண்டாம்…. வெளியுறவுத்துறை அமைச்சகம்…..!!!!

கடந்த வாரம் உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்தப் போர் காரணமாக ரஷ்யா-உக்ரைன் ஆகிய இருநாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகம் நேர்ந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை முற்பகல் 10.00 (உள்ளூர் நேரம்) முதல் நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைனில் 10 நாட்களாக போர் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், உக்ரைன் மக்களும், அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் போர் நடக்கும் இடங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற உதவும் வகையில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தது.

இந்நிலையில் உக்ரைனில் தங்கியிருக்கும் இந்திய மாணவர்கள் தங்களின் இடங்களில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமி நகரிலிருந்து இந்திய மாணவர்கள் உயிரை பணயம் வைத்து எல்லை நோக்கி நடந்தே செல்லும் நிலையில், மாணவர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவர்களுடன் அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |