நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய அனைத்து வகையான ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் தான் இடம் பெற்றிருக்கும். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது தாகூர் மற்றும் அப்துல் கலாம் படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆலோசனை செய்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அதற்கு ரிசர்வ் வங்கி தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதன்படி ரூபாய் நோட்டுகளில் மாற்றம் எதுவும் செய்யப்பட்டது. ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மாற்றாக பிற தலைவர்களின் படம் இடம்பெறும் என்ற தகவலுக்கு மறுப்பு தெரிவித்து ஆர்பிஐ இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது