Categories
மாநில செய்திகள்

Breaking: இந்த மாவட்டங்களில் இன்று முதல் மிக கனமழை… எச்சரிக்கை…!!!

ராமநாதபுரம், நாகை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் தமிழகத்திற்கு நாளை முதல் சனிக்கிழமை வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், டெல்டா மாவட்டங்கள் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மதுரை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொ.ருத்தவரை 27 மற்றும் 28 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Categories

Tech |