கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 1-ஆம் தேதி(இன்று) முதல் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் தென்மேற்கு பருவமழை காரணமாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.