நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
சென்னையில் இன்று ஒரே மட்டும் 664 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செங்கல்பட்டு -162, கோவை- 153, திருவள்ளூர்- 89, தஞ்சை-108, காஞ்சி -63, திருப்பூர்- 33, சேலம்- 45 ,மதுரை- 43, ஈரோடு- 33, வேலூர்- 25, திருவாரூர் -52, கடலூர்- 28, திண்டுக்கல்- 21, குமரி-19, திருச்சி -34, விழுப்புரம்-18, நாமக்கல்-16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.