Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

#BREAKING : இந்த 3 மாவட்டங்களில் நாளை (13ஆம் தேதி) விடுமுறை!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..

சற்று முன்னதாக தான் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.. கன மழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் காரணத்தால் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்..

Categories

Tech |