வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனால் நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கன மழை வெளுத்து வாங்கியது. அதுமட்டுமல்லாமல் இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் புதுச்சேரி – சென்னை இடையே கரையை கடந்தது என தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து சிவப்பு எச்சரிக்கையும் விலக்கி கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது.