தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் பேசிய 43 ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வந்தன. இதையடுத்து நேற்று நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவிடம் பேசியவர்கல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்
இந்நிலையில் இன்று 44வது ஆடியோ வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளது .அந்த ஆடியோவில், அதிமுக கட்சியை காப்பாற்ற நான் வந்தே தீருவேன் என சசிகலா தெரிவித்துள்ளார் .ஓரிருவர் சுயநலத்துக்காக தொண்டர்கள் நீக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. கட்சியை காப்பாற்ற நான் வந்தே தீருவேன் அதற்கான நேரம் தற்போது வந்துள்ளது என்று கூறினார்.
இந்நிலையில் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்க ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஆல் முடியவில்லை என்பதால் இனியும் பொறுக்க மாட்டேன், அதிமுகவில் கட்சி நலனை நான் பார்க்கவில்லை. சொந்த நலனையே பார்த்தார்கள். தலைவர்கள் காலத்து ஆட்கள் கூட ஓபிஎஸ்- இபிஎஸ் புறக்கணிப்பதாக சசிகலா மிக ஆவேசமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் தென் மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.