Categories
மாநில செய்திகள்

Breaking : இனி ஆண்டுதோறும்….. ஜூலை 1 முதல்….. தமிழக மக்களின் தலையில் இடி விழும் அறிவிப்பு…..!!!!

ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் மின்கட்டணத்தை 6 சதவீதம் உயர்ந்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் மின் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தமிழக மக்கள் தலையில் மேலும் ஒரு இடி விழுந்துள்ளது. இந்த செய்தி அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.  8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இனி 101 – 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 27.50 என 2 மாதங்களுக்கு சேர்த்து 355 ரூபாயும்,  201 – 300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதங்களுக்கு சேர்த்து ரூ.145 ரூபாயும்,  301- 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதங்களுக்கு சேர்த்து 295 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |