Categories
மாநில செய்திகள்

Breaking: இனி எப்ப வேணாலும்… ‘செம’ உத்தரவு வந்துடுச்சு…!!!

சென்னை புறநகர் ரயில் வெளியில் நாளை முதல் அனைத்து நேரங்களிலும் பெண்கள் அனைவரும் ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா எதிரொலியால் சென்னை புறநகர் ரயில்களில் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள் மற்றும் ரயில் பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது பெண்கள் அனைவரும் நாளை முதல் அனைத்து நேரங்களிலும் ரயில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |