Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இனி மாஸ்க் போடலனா ரூ.500 அபராதம்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சூழலில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. அதனால் மக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியமாக உள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் போடாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே வழங்கியுள்ளோம். மேலும் கொரோனா அதிகரிப்பால் மக்கள் பதட்டமடைய தேவையில்லை என மத்திய அரசே கூறியுள்ளதாவது அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |