நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது.
அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு மட்டுமே விமான சேவை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி 5 முதல் டெல்லி, மும்பையில் இருந்து வரும் விமானங்களுக்கு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.