Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி 2 முறை தேர்வு…. தமிழகத்தில் முதல்முறை….. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அரசு போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பும் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வை எதிர் கொள்ள வேண்டும் என்று அதிர்ச்சி தரும் அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

வரும் டிசம்பர் மாதத்தில் இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை தமிழகத்தில் முதல்முறையாக அமல்படுத்தப்பட உள்ளது. அரசாணை எண் 149-ஐ நீக்க ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது

 

Categories

Tech |