தமிழக அரசு துறைகளில் நேரடி பணி நியமனத்தில் சேருவதற்கான வயது வரம்பை 30 லிருந்து 32 ஆக அதிகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான அரசு பணிகள் TNPSC எனப்படும் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படும். இந்நிலையில் அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயதுவரம்பு 30 லிருந்து 32 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, TNPSC, TRB உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையங்கள், இதர நியமன பதவிகளில் நேரடி நியமனம் மூலம் பணி பெறுவதற்கான வயது உச்சவரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையிலான பணி நியமனங்களுக்கு வயது உச்சவரம்பு நீட்டிப்பு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.