Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: இன்னும் அரைமணி நேரத்தில்….. மாணவி வீட்டில் நோட்டீஸ்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக பயங்கர போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்த பென்ச், சார் உள்ளிட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து எறிந்தனர். காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சி மேற்கொண்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறுஉடற்கூறாய்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை தரப்பு செய்த மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அதேவேளையில் தற்போது உயர்நீதிமன்ற உத்தரவு படி நடைபெறும் மறுஉடற்கூறு ஆய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.  உயர்நீதிமன்றம் அமைத்த மருத்துவர் குழுவை குறை கூறவேண்டாம் என கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூராய்வை, அவரது பெற்றோர் இல்லாமலே நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, பிற்பகல் 1 மணிக்கு உடல் மறுகூராய்வு நடைபெறவுள்ளது. மேலும், மறு உடற்கூராய்வு தொடர்பாக, மாணவியின் வீட்டுச் சுவரில் வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். மறு உடற்கூராய்வின் போது தங்கள் சார்பாக மருத்துவர் இருக்க வேண்டுமென்ற மாணவியின் தந்தையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |