செவ்வாய், சந்திரனுக்கு மிக அருகில் வரும் அரிய நிகழ்வு இன்னும் சில நொடிகளில் நிகழப்போகிறது.
இன்று இரவு 8:34 மணியளவில் சந்திரன் மற்றும் செவ்வாய் மிக நெருக்கமாக வரக்கூடிய நிகழ்வு உச்சக் கட்டத்தை அடைகிறது. எனவே பூமியிலிருந்து செவ்வாயை காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகமானது, சந்திரனை சுமார் இரண்டு டிகிரிக்கும் குறைந்த தூரத்தில் கடந்து செல்கிறது. இதனை வெற்றுக் கண்களால் நாம் காணமுடியும் என்று கூறப்பட்டிருக்கிறது.