தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 100 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 150 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்ததாகவும், 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.