தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் இன்று இரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கி உள்ளதால் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதனால் அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்க தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
அதனால் சூழலைப் பொறுத்து இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.