Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று காலை 11 மணிக்கு…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து திமுக மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் திமுக செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |