தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாநகராட்சி பகுதியில் இன்று பொதுமக்களுக்கான தடுப்பூசி போடப்படமாட்டாது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் இன்று மருத்துவ முகாம்கள் நடைபெறும். கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு 18004255019, 0422-2302323, 9750554321 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.