தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கடுமையாக பரவி வந்த சூழலில் அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை செயல்படுத்தியதன் மூலமாக தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியதால் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ஒருவர்கூட சிகிச்சை இல்லாத நாள் இன்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.