அசானி புயல் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வங்கக்கடல் பகுதியில் உருவான அசானி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில் மாவட்டங்களிலும் மழை பெய்தது.
இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.