நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.
நாடு முழுவதும் கொரோனா குறைந்து வரும் சூழலில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் இது தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்ற வாய்ப்புள்ளது. மேலும் சில அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும், நலத்திட்ட உதவிகள் மற்றும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.