தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள காரணத்தால் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மற்ற மாவட்டங்களுக்கு மட்டுமே தளர்வுகள் பொருந்தும்.
இதில் நீலகிரி மாவட்டம் கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் பயணிகளுடன் செல்ல அனுமதி. மின் பணியாளர்கள் ,கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குதல் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 முதல் 5 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுயதொழில் செய்பவர்கள் இ-பதிவு செய்ய தமிழக அரசின் eregister.tnega.org என்ற இணையதளத்தில் உள்ளே செல்ல வேண்டும். அதனுள் சென்றால் என்ன வகை வேலை என்பதை தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பதாரரின் அடையாள அட்டை, அடையாளச் சான்று,முகவரி மற்றும் பயணிக்கும் வாகனத்தை பற்றிய விவரங்களைக் கொடுத்தால் பதிவு செய்யப்படும் ரசீது வழங்கப்படும். அதனை டவுன்லோட் செய்து காவலர்களிடம் காட்டி தொடர்ந்து பயணிக்கலாம்.