Categories
தேசிய செய்திகள்

BREAKING: இன்று வங்கிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம்…. அதிர்ச்சி தரும் செய்தி…!!!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதால் பண பரிவர்த்தனை பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் அனைவரும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

அதன்படி பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. ஏடிஎம் மையங்கள் முழு அளவில் செயல்படுவதற்காக, தேவையான அளவு பணம் நிரப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பல இடங்களில் ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |