பஞ்சாப் அணியை எதிர்த்து இன்று டெல்லி அணி விளையாட இருந்த நிலையில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ரேபிட் பரிசோதனை தொற்று உறுதியான நிலையில் RT-PCR பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதியான நிலையில், புனேவில் நடைபெறவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.