இபிஎஸ், ஓபிஎஸ் மீது சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக உட்கட்சி தேர்தலில் மனு அளிக்க சென்றவர்கள் மீது அதிமுக கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தன. மேலும் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது பாதிக்கப்பட்ட ஜெயச்சந்திரன், விஜயகுமார் உள்ளிட்ட 6 பேர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் தங்களை தாக்கியதாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.