அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதை எடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வாக உள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது.
ஜூலை 11ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இரட்டை தலைமை தேர்தல் ரத்து,அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய ஒப்புதல் தரப்படும் என்றும் கட்சியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓபிஎஸ் தரப்பு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.