இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா அறிகுறிகள் இருப்பதால் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகி இருந்த சூழலில் அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.