Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: இயக்குனர் ஹரி மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி…!!!

இயக்குனர் ஹரி கடும் காற்று காரணமாக பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தமிழ் என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஹரி. இதனையடுத்து சாமி, சிங்கம், வேல், ஆறு மற்றும் வேங்கை ஆகிய படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். மேலும் இவர் தற்போது நடிகர் அருண் விஜய்யின் 33வது படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனி தொடங்கப்பட்டது.

இந்நிலையில் நெய்க்கரபட்டியில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வரும் பிரபல இயக்குனர் ஹரி கடும் காய்ச்சலால் பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் பணியாற்றிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது ஹரியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்துள்ளது.

Categories

Tech |