இயல்புநிலை திரும்பும்வரை மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது என்று இந்திய தொழில்நுட்பக் கழகம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயல்பு நிலை திரும்பும் வரை கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கழகம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது. பிற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இணைய வசதி வழங்க வேண்டும். எவ்வளவு தூரம் மேலும் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.