தமிழகத்தில் ஓமிக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்..
ஓமிக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்..
ஓமிக்ரான் தமிழகத்திற்குள் வந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய ஒரு முக்கிய ஆலோசனையாக இது பார்க்கப்படுகிறது.. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.. வரக்கூடிய அடுத்த சனிக்கிழமை புத்தாண்டு கொண்டாட்டம் இருக்கிறது.. ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 இல் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் இரவு நேர கொண்டாட்டங்கள் வேண்டுமா? இரவு நேர ஊரடங்கு தேவையா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.. உத்தரபிரதேச மாநிலத்தில் சற்று முன்புதான் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்க கூடிய நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..
ஏற்கனவே டிச., 25 ஆம் தேதியில் இருந்து ஜன.,2 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.. விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது..
தமிழகத்தில் 50 நபர்களுக்கு ஓமிக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பலரும் குணமடைந்துள்ளனர்.. தற்போது 34 பேருக்கு மட்டும்தான் தமிழகத்தை பொருத்தமட்டில் ஓமிக்ரான் இருக்கிறது.. இந்த ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடும் செய்திக்குறிப்பில் தான் தெரியவரும்..