தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காரணத்தினால் பல இடங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இதனால் தொற்று மீண்டும் பரவும் அபாயம் ஏற்படும் என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் அறிவித்து வருகின்றனர். அதுவும் சென்னையில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடு மீன் மார்க்கெட்டுக்கு மக்கள் அதிகளவு சென்று வருகின்றன. இங்கு யாரும் கொரோனா நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் கொரோனா பரவல் காரணமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மொத்த வியாபாரிகள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 7 நுழைவாயிலில் மூடு நுழைவாயிலில் மட்டுமே வியாபாரிகளுக்கு அனுமதி. மேலும் துறைமுகத்தில் நிரந்தரமாக இருக்கும் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.