நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கர்நாடகாவில் நாளை முதல் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். ஜூலை 26 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், ஜூலை 26ஆம் தேதி கல்லூரிகளை திறந்தாலும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.