இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. அதனால் தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையில் இருந்து ராணுவ பாதுகாப்புடன் மஹிந்த ராஜபக்ஷ வெளியேறினார். கொழும்பு வீதிகளில் போராட்டத்தால் பதற்றம் நீடிக்கும் சூழலில் உயிருக்கு பயந்து வெளிநாட்டிற்கு அவர் தப்பிச் செல்ல உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஜனநாயகம், நிலை தன்மைக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி தீர தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.