இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொழும்பு பகுதியில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இங்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்த சூழலில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் தற்போது அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து மக்கள் தொடர்ந்து தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை பிரதமரை பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பி வந்த நிலையில் தற்போது இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் மொரட்டுவை மேயரின் வீட்டில் தாக்குதல் நடத்தி போராட்டகாரர்கள் தீ வைத்துள்ளனர்.