Categories
தேசிய செய்திகள்

BREAKING: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ராஜினாமா…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். அதன் காரணமாக ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதனால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து மக்கள் தொடர்ந்து தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை பிரதமரை பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பி வந்த நிலையில் தற்போது இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்யவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.

Categories

Tech |