Categories
மாநில செய்திகள்

BREAKING: இலவசம்… இலவசம்… பெண்களுக்கு ஒரு ரூபாய் மட்டுமே… செம அறிவிப்பு…!!

இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று மதுரை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.

நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், விவசாயிகளின் சுமைகளை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில் மதுரை மாநகராட்சி அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

விவசாயிகள் விவசாயிகளுக்கான சான்றுகள் அல்லது உழவர் அடையாள அட்டை இருந்தால் அவற்றை காண்பித்தால் உரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினர் இயற்கை உரத்தை ஒரு கிலோவிற்கு ரூபாய் 1 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். ஒரு மெட்ரிக் டன் உரம் ஏற்றுவதற்கு கூலியாக ரூபாய் 100 மட்டும் செலுத்தினால் போதும் எனவும் அறிவித்துள்ளது.

Categories

Tech |