சென்னையில் இளம் தமிழ் நடிகர் ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூரில் சேர்ந்த இளம் நடிகர் ஸ்ரீவத்சவ்சந்திரசேகர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் என்னை நோக்கி பாயும் தோட்டா, வல்லமை தாராயோ வெப்சீரிஷில் நடித்துள்ளார். இந்நிலையில் எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாத நிலையில், படப்பிடிப்பிற்கு செல்வதாக கிளம்பிச் சென்ற அவர் தனது வீட்டுக்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
எப்போதும் தனிமையில் இருக்கும் அவர் சில மாதங்களாகவே மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அவரின் மரணம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மனநோயால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.