தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து நேற்றுடன் ஒரு வருடம் முடிவடைந்து விட்டது. இந்த ஒரு வருட காலத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய தொழில் முதலீடுகளையும் ஈர்த்துள்ளார். இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் அவ்வப்போது வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தற்போது மீண்டும் வெளிநாடு பயணம் செல்கிறார். அதன்படி ஜூன் மாதம் இறுதியில் லண்டன், ஜூலையில் அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனால் மேலும் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.