Categories
மாநில செய்திகள்

BREAKING: இ – பதிவில் மீண்டும் திருமணத்திற்கான அனுமதி …. அரசு திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி  பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க மாவட்டங்களுக்கு உள்ளே, வெளியே செல்ல இன்று முதல் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு இ பதிவில் மாற்றம் அறிவித்தது. அதன்படி இ பதிவு இணையதளத்திலிருந்து திருமணத்திற்கான அனுமதி நீக்கம் செய்யப்பட்டது. மருத்துவம் மற்றும் இறப்புக்கு மட்டுமே இ-பதிவில் அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து தமிழக அரசின் இ பதிவு இணையத்தளத்தில் திருமணத்திற்கான அனுமதி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு அதிகம் பேர் விண்ணப்பித்ததாக கூறி நேற்று அதற்கான அனுமதி இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் திருமணத்திற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.

Categories

Tech |